உட்கட்சி பூசல் சூழலில் டெல்லி அவசர ஆலோசனைக்கு அழைக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர்கள்! தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிமுக உடனான கூட்டணி விவகாரங்களைத் தீர்க்கும் நோக்கில், மாநில தலைவர்களை பாஜக மேலிடம் அவசரமாக டெல்லிக்கு அழைத்துள்ளது. நாளை நடைபெறவுள்ள பாஜக உயர்மட்ட குழுக் கூட்டத்திற்கு முன்பாக, இன்று இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி அறிவித்த நாளிலிருந்தே இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களிடையே ஒருமைப்பாடு உருவாகாத நிலை நீடித்தது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை இடையிலான மோதல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டால் தற்காலிகமாக அடங்கியிருந்தாலும், உட்கட்சி பூசல் பாஜகவில் தொடர்கிறது.

அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நிலைமை குறித்து பாஜக தலைமையகத்துக்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவசரமாக டெல்லி புறப்பட்டுள்ளனர்.

ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழக பாஜகவில் நிலவும் குழப்பத்துக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், அதிமுக உடனான தொகுதி பங்கீடு, 234 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாஜகவின் வலுவான தொகுதிகளை அடையாளம் காண்பது, அடுத்தடுத்த பிரசாரத்திட்டங்களை வகுப்பது போன்ற முக்கிய தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu BJP leaders called for emergency meeting in Delhi amid internal party dispute Meeting on seat sharing Kamalalayam in a state of excitement


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->