மக்களவை தேர்தல்: தி. நகரில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

காலையிலிருந்து பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தென்சேன்னை தொகுதிக்கு உட்பட்ட தி. நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வாக்களிக்காமல் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். 

அதேபோல் அரியலூர், கீழையூர் வாக்கு சாவடியில் இரண்டு இயந்திர கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. திருப்பூரிலும் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு 30 நிமிடம் தாமதமானது. 

நெல்லை, தச்சநல்லூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளை அதிகாரிகள் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T Nagar 1 hour stopped polling


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->