தென் மாவட்ட பயணிகளுக்கு ரெயில்வே சர்ப்ரைஸ்...! - நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்!
surprise passengers southern districts from railways Nellai and Podhigai Express timings changed
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் முதன்மை தேர்வாக விளங்கும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் நேரத்தில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வருகிற 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினசரி திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632), தற்போது நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வருகிறது. ஆனால், 1-ம் தேதி முதல் இந்த ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக, இரவு 8.50 மணிக்கு புறப்படும்.
இதன் காரணமாக, சென்னை எழும்பூரை அடையும் நேரமும் மாற்றப்பட்டு, காலை 7 மணிக்கு பதிலாக 7.10 மணிக்கு சென்றடையும்.அதேபோல், செங்கோட்டை – சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12662) ரெயில், தற்போது மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது.
புதிய நேர அட்டவணைப்படி, இந்த ரெயில் மாலை 6.50 மணிக்கு புறப்படும். மேலும், மறுநாள் காலை எழும்பூரை அடையும் நேரம் மாற்றப்பட்டு, வழக்கமான 6.10 மணிக்கு பதிலாக 5.55 மணிக்கே சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செங்கோட்டை – தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16102) ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை அடையும் இந்த ரெயில், 1-ம் தேதி முதல் 1 மணி 25 நிமிடங்கள் முன்னதாக, அதாவது காலை 6.05 மணிக்கே தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.இந்த நேர மாற்றங்கள் தென் மாவட்ட பயணிகளுக்கு நேரச் சேமிப்பும், வசதியான பயண அனுபவமும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
surprise passengers southern districts from railways Nellai and Podhigai Express timings changed