திருமணம் ஆகாத காரணத்தினால், விபரீத முடிவெடுத்த வாலிபர்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே கிராமப்புற பகுதியை சேர்ந்த செல்வம் என்ற செல்வராஜ் (30) கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். செல்வம்  தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். எனவே, செல்வராஜிக்கு அவரது பெற்றோரும் பல இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளனர்.

ஆனால், செல்வராஜுக்கு எங்கு தேடியும், செல்வராஜுக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால், நேற்று செல்வராஜிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென செல்வராஜ் விரக்தியில் அவரது வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டுள்ளார்.

death, seithipunal

செல்வராஜின் பெற்றோர் எவ்வளவோ கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால், அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளனர். அப்போது செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கிய காட்சியை அவரது பெற்றோர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை புஷ்பராஜ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் துரையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide in thindukkal


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal