#சீர்காழி :: பேராசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் தூய்மை பணியாளர்களை விட குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் பேராசிரியர்கள்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் இந்து சமய அறநிலைத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரில் சுயநிதி பிரிவில் சுமார் 40 பேராசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு கல்லூரியில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை விட குறைவான சம்பளம் வழங்கப்படுவதாகவும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பேராசிரியர்களுக்கு ஆதரவாக இன்று மாணவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வந்த ஜெக வீர பாண்டியன் மற்றும் மகேந்திரன் என்பவர்கள் பேராசிரியர் கண்ணகி என்பவரை தவறாகப் பேசியதாகத் தெரிவித்து 40 பேராசிரியர் வெளிநடப்புச் செய்து கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு இடையே நடைபெற்றப் பேச்சு வார்த்தையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பேராசிரியர்களுடன் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பான சூழல் உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students joined protest in support of professors


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal