திருவிழா முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி...! காரணம் என்ன?
student committed suicide after returning home after festival What reason
திருவள்ளூர் திருத்தணி ஜோதிநகரில் செந்தில் ராஜன் என்பவருடைய மகள் 19 வயது காயத்ரி.இவர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் (B.SC.COMPUTER SCIENCE) 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி தனது தோழிகளுடன் ஜோதி நகரில் நடைபெற்ற திருவிழாவில் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.இதையடுத்து வீட்டுக்கு சென்ற காயத்ரி திடீரென அறையை பூட்டி தூக்கிட்டு தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கத்தி கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் காயத்ரியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர்.இதுதொடர்பாக திருத்தணி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கல்லூரி மாணவி காரணம் தெரிவிக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
student committed suicide after returning home after festival What reason