எச்சரிக்கை! இடையூறாக விஜய் அனுமதியின்றி ரோடுஷோ நடத்தினால் கடுமையான நடவடிக்கை...! - மதுரை கமிஷனர்
Strict action taken if Vijay conducts roadshow without permission Madurai Commissioner
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான 'விஜய்' தற்போது,தனது கடைசி படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக இன்று மாலை 'விஜய்' தனி விமானம் மூலம் மதுரை வந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்லவுள்ளார். மேலும் விஜய் மதுரைக்கு வருவது குறித்து அறிந்த கட்சியின் தொண்டர்கள், இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய் ரசிகர்களுக்காக, ''ரோடுஷோ'' நடத்தி அவர்களை உற்சாகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கமிஷனர் லோக நாதன்:
இது தொடர்பாக, மதுரை மாநகர காவல் கமிஷனர் 'லோக நாதன்' குறிப்பிடுகையில், "விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மாலை மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் அவர் ''ரோடுஷோ'' நடத்துவது குறித்து காவலர்களிடம் இதுவரை அனுமதி கேட்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி 'விஜய் ரோடுஷோ' நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.இது விஜயின் ரசிகர்களுக்கு சற்று வேதனையை அளித்துள்ளது.
English Summary
Strict action taken if Vijay conducts roadshow without permission Madurai Commissioner