கல்லிடைக்குறிச்சியில் பரபரப்பு! காவலரின் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன்...! - பணம், பொருட்களுடன் ஓட்டம்...!
stir Kallidaikurichi robber showed off his skills locked house policeman He fled money and goods
திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்த ஞானசுந்தர் (35), கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம்-இல் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
மேலும் சொந்த வீடு கோல்டன் நகரில் இருந்தாலும், பணியிடம் வசதிக்காக குடும்பத்துடன் வி.கே.புரம் காவலர் குடியிருப்பில் தங்கி வந்ததால், அவரது வீடு பெரும்பாலும் பூட்டியே இருந்தது.

அவ்வப்போது மட்டும் வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டைச் சரிபார்க்க வந்த அவர், முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்கள் மாயமாகி இருந்தன.
மேலும்,வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெளிவானது.
இதையடுத்து ஞானசுந்தர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, திருடர்களை பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி,காவல்துறை அதிகாரியின் வீட்டிலேயே கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி மற்றும் அதிர்ச்சி நிலவி வருகிறது.
English Summary
stir Kallidaikurichi robber showed off his skills locked house policeman He fled money and goods