மாநில அந்தஸ்து பொதுநல அமைப்புகள் இருசக்கர வாகன பேரணி!
State status public welfare organization two-wheeler rally
மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி பொதுநல அமைப்புகள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
சுதேசி மில் அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சாலை வழியாக காமராஜர் சிலை,நேரு வீதி,மிஷன் வீதி,மகாத்மா காந்தி ரோடு முத்தியால்பேட்டை மணிகுண்டு, சிவாஜிசிலை ECR ரோடு,, ராஜீவ் காந்திசிலை,இந்திரா காந்தி சிலை,நெல்லித்தோப்பு சுப்பையா சிலை எம்ஜிஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் பேரணி முடிக்கப்பட்டது..
பேரணிக்கு தலைமையேற்ற சட்டமன்ற உறுப்பினர் நேருபேசும்போது,இந்திய திருநாடு தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் புதுச்சேரிக்கான உண்மையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 7 ஆண்டுகள் கடந்த பிறகு நாமாக விரும்பி பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்று இந்திய தேசத்துடன் இணைத்துக்கொண்ட நமக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மாறாக மத்தியில் ஆண்ட அரசுகளும்இ தற்போது ஆளும் அரசும் நமக்கான சுதந்திரத்தை வழங்காமல் அவர்களின் புதிய சட்டத்;திட்டங்களுக்கு நம் புதுச்சேரி மாநிலத்தை ஒரு சோதனை கூடமாக மாற்றி அமைத்து கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தக்கூடிய இடமாக கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இதனால் நமக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. அதை மீட்க நாம் இரண்டாவது சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதையெல்லாம் தட்டிகேட்டு மாநிலத்திற்கான உரிமையை பெற வேண்டிய ஆண்ட கட்சிகளும், ஆளுங்கின்ற கட்சிகளும், எதிர்கட்சிகளும் மாநில அந்தஸ்துக்கான ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல் ஆட்சிக்கு வர நினைப்பது நியாயமற்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று போராடியவர்கள் இன்று மாநில அந்தஸ்து பிரச்சினைகளை கையில் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வினோதமாக இருக்கிறது.தற்போது இவர்கள் மாநில அந்தஸ்து பிரச்சினையை கையில் எடுக்காமல் தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என்று வாக்குறுதி கொடுத்து அரசியல் செய்வது மக்களை முட்டாளாக்கும் செயலாகும். புதுச்சேரி மாநில மக்கள் ஏமாளிகள் இல்லை என்று இவர்கள் உணர வேண்டும்.
ஆண்ட கட்சிகளும்இ ஆளுகின்ற கட்சிகளும், தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில உரிமையை பற்றி பேசி மக்களை திசை திருப்பி ஓட்டுகளை பெறலாம் என்று நினைக்கிறார்கள்.
இவர்களின் தேர்தல் நேரத்து நாடக அரசியலை பார்க்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலும் இப்படி நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த பிறகு மேடைக்கு மேடை சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை ஆளுநருக்கு தான் அதிகாரம். இதனால் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்று கூறி வருதை எத்தனை காலத்திற்கு தான் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம் என்று கூறும் நிலையில் உள்ளனர்.
மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஒன்றுக்கும் உதவாத இந்த பருத்தி மூட்டைகளும், புண்ணாக்கு மூட்டைகளும் குடோனில் இருந்தால் என்ன வெளியில் கிடந்தால் என்ன என்ற வகையில் அரசியல் கட்சிகள் காலங்காலமாக தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிகொண்டு இருப்பதை விட இவர்கள் தேர்தலை சந்தித்து ஒவ்வொரு முறையும் ஆட்சி அமைத்தால் என்ன, ஆட்சி அமைக்காவிட்டால் என்ன என்று கேட்டு அந்த பருத்தி மூட்டைகள் கதைகள் போல் இவர்கள் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து தேர்தலில் போட்டியிடாமல் வீட்டிலேயே இருக்கலாம். எதற்கு இவர்கள் சட்டமன்ற குடோனில் இருக்க ஆசைப்படுகிறார்கள் என்று கேள்வி கேட்கும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிடாத பொதுநல அமைப்புகளுக்கு இருக்கும் அக்கறை கூட ஆளும்கட்சியாக இருப்பவர்களுக்கும் பிரதான எதிர்கட்சியாக இருப்பவர்களுக்கும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் நினைத்தால் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கை வலுபடும். ஏன் என்றால் பிரதான எதிர்கட்சியாக இருப்பவர்களின் கூட்டணியில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 பாராளுமன்ற உறுப்பினர்களும், 10க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் மனது வைத்தால் மத்திய அரசின் இரு அவைகளிலும் புதுச்சேரிக்கு நியாயமாக வழங்க வேண்டிய மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரிக்கான உரிமைகளை பெற்று தர முடியும்.
ஆனால் இதையெல்லாம் செய்யாத இவர்கள் நாங்கள் ஆட்சி அமைத்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என்று ஒவ்வொரு தேர்தலின் போது கூறுவது வெட்ககேடு. ஆகையால் ஏற்கனவே ஆண்ட அரசியல் கட்சிகளும் ஆளுகின்ற அரசியல் கட்சிகளும் புதுச்சேரி மக்கள் மீது உண்மையாக அக்கறை இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் பலகட்ட போராட்டங்களை நடத்தி மத்திய அரசை வலியுறுத்துவதுடன் மத்திய அரசின் இருஅவைகளிலும் உள்ள அவரவர் கட்சி எம்பிகளை பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க செய்து மக்களுக்கான உரிமையை பெற்று தரவேண்டும் என்று புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பாக நடைபெறும் மாபெரும் இருசக்கர வாகன பேரணி வாயிலாக கேட்டுக்கொள்கிறேம்.
English Summary
State status public welfare organization two-wheeler rally