திமுகவினருக்கு ஸ்டாலின் விடுத்த அறிவிப்பு..! களத்தில் இறங்கும் உபிஸ்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெய்து வரும் கன மழையில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, கடலூர் உள்பட பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத்தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதுபோலவே, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin to dmk members


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal