அதிமுகவின் அடிமடியில் கை வைத்த  ஸ்டாலின்.! பெல்ட்டை உருவி சாட்டையை சுழற்றும் திமுக., அதிர்ச்சியில் அதிமுகவினர்.!  - Seithipunal
Seithipunal


எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி இருக்கின்றார்.

திருப்பூரில் திமுக சார்பில் தமிழகம் மீட்போம் எனும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பொழுது, “கலைஞர் தான் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தார். கொங்கு மண்டலத்தில் பல்வேறு அதிமுக அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சித் திட்டங்களில் மிகவும் பின்தங்கிவிட்டது. திருப்பூரில் பைபாஸ் சாலை அமைக்கவும், அத்துடன் 5 பாலங்கள் கட்டவும் திட்டம் தீட்டியது திமுக ஆட்சியில் தான். அதிமுக ஆட்சியில் மூன்று பாலங்களின் பணிகளையும் நிறுத்திய காரணத்தால் போக்குவரத்து நெரிசல் தொடர்கின்றது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர்கள் வேலு மணி, தங்கமணி ஆகியோர் கொங்கு மண்டலத்திற்கு எதுவுமே செய்யவில்லை. திருப்பூரில் சிறு குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் திணறிக் கொண்டு இருப்பதற்கு அதிமுக அரசுதான் காரணம். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூரை, தற்போது டல் சிட்டியாக அதிமுக மாற்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

முன்னதாக திமுக எம்.பி கனிமொழி எடப்பாடியில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். ஸ்டாலினும் கொங்கு மாவட்டங்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றார். அதிமுகவின் பெல்ட்டாக கொங்கு மண்டலங்கள் தான் கருதப்படுகிறது. அந்த கொங்கு மண்டலத்தையே திமுக அசைக்க நினைப்பது கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin plan about kongu district


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->