அதிமுக.வுக்கு ஆப்பு அடிக்கும் ஸ்டாலின்! 2026ல் மீண்டும் திமுக தான் - வெளியான கருத்து கணிப்பு! - Seithipunal
Seithipunal



2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கணிப்புகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியா டுடே – சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 14ஆம் தேதி வரை, நாடாளுமன்றத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மக்கள் மனநிலை மற்றும் வாக்கு விகிதங்கள் ஆராயப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் இந்தி திணிப்பு, இருமொழிக் கொள்கை, மாநில உரிமைகள் குறைவு போன்ற விவகாரங்களில் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த அரசியல் நிலைப்பாட்டுக்கு தமிழக மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாகவும், அதுவே திமுக கூட்டணிக்குச் சாதகமாக உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 47% வாக்குகளைப் பெற்ற திமுக கூட்டணி, தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் 48% வாக்குகளைப் பெறும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை மாநிலத்தில் இருந்தாலும், அதனை முழுமையாக அதிமுக – பாஜக கூட்டணி பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது. கருத்துக்கணிப்பின் படி, இக்கூட்டணி அதிகபட்சம் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் குறித்தும் கருத்துக்கணிப்பில் முக்கியமான தகவல் வெளிவந்துள்ளது. புதிய கட்சி திமுக கூட்டணிக்கு எதிராக உள்ள மனநிலையிலிருந்து வாக்குகளைப் பிரிக்கும். ஆனால் அந்தப் பிரிவு நேரடியாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு பலன் அளிக்காது; மாறாக அது திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு வலுவான சவால் விட முடியாத சூழ்நிலையை, வெற்றி கழகத்தின் தனித்துப் போட்டியிடும் தீர்மானம் மேலும் பலவீனப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு தமிழகத்தை மட்டும் அல்லாமல், தேசிய அளவிலும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடைபெற்றால், பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். அதே சமயம், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்த கருத்துக்கணிப்பு, தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாகத் தொடரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. புதிய கட்சிகள் வருகையாலும், வாக்குகள் பிளவுபட்டாலும், அதனால் பலன் அடைவது ஆளும் திமுக கூட்டணியே என்ற உண்மையை வெளிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin hits back at AIADMK DMK will win again in 2026 Opinion poll released


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->