விஜயின் கனவை கலைத்துவிட்ட ஸ்டாலின்! ராகுல்காந்தி சந்திப்பை கேன்சல் செய்த விஜய்! அடுத்த பிளானுக்கு ரெடியாகும் விஜய்!
Stalin has shattered Vijay dream Vijay has canceled the meeting with Rahul Gandhi Vijay is ready for the next plan
பீகாரில் இன்று நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பங்கேற்றார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஸ்டாலினின் பங்கேற்பு, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தீவிர முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக விஜய் – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து, காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்கத் தவெக முன்வந்ததாக செய்திகள் பரவின. ஆனால், இது தவெக சார்பிலான ஒரு வியூக வகுப்பாளர் கிளப்பிய செய்தி என்று காங்கிரஸ் – திமுக வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இதேநேரத்தில், காங்கிரஸ் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜயை நேரடியாக விமர்சித்து,“விஜயகாந்த் கூட 10%க்கும் அதிக வாக்குகளை பெற்றார். இன்று அந்தக் கட்சியின் நிலை என்ன என்பதை விஜய் கவனிக்க வேண்டும். அரசியலில் அடக்கமாகவும், நாகரீகமாகவும் பேசுவது அவசியம். காங்கிரஸ் யானை போல பலம் கொண்ட கட்சி. நடிகர் சிரஞ்சீவியும் பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கி பெரும் கூட்டம் திரட்டினார். ஆனால் முடிவில் அந்தக் கட்சி காங்கிரஸுடன் இணைய, இன்று அதன் தடயமே இல்லை” எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், ராகுல் காந்தியுடன் விஜயைச் சந்திக்க முயற்சித்ததாக கூறப்படும் தகவல்களும், காங்கிரஸ் வட்டாரங்களில் மறுக்கப்பட்டுள்ளன. ராகுல் – சோனியா காந்தி தரப்பில், விஜயைச் சந்திப்பது தவறான சிக்னலைக் கொடுக்கும் என்பதால், அந்த சந்திப்பு திட்டமே கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பீகாரில் நடைபெற்ற யாத்திரையில் ஸ்டாலின்,“வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறித்தே தீர்வார்கள். 2024 தேர்தலில் 400 இடங்களை கனவு கண்டவர்களை 240 இடங்களுக்கு அடக்கியது இந்தியா கூட்டணி. மக்கள் சக்தி முன்பு எந்த சர்வாதிகாரியும் மண்டியிட வேண்டியிருக்கும்” என உரையாற்றினார்.இந்த நிகழ்வு, தவெக – காங்கிரஸ் கூட்டணி வாய்ப்புகள் மங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது.
English Summary
Stalin has shattered Vijay dream Vijay has canceled the meeting with Rahul Gandhi Vijay is ready for the next plan