குன்னூர் - ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்க முடிவு.! 
                                    
                                    
                                   special train run in ooty kunnur
 
                                 
                               
                                
                                      
                                            நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அதிலும், விடுமுறை நாட்களில் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, இன்றும் நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கும் தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே மூன்று முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகமடைந்து உள்ளனர். 
                                     
                                 
                   
                       English Summary
                       special train run in ooty kunnur