ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை..வடமாநில வாலிபர்கள் செய்த செயல்..மெரினாவில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினாவில் பெண் போலீசிடம் இரண்டு வாலிபர்கள் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை போலீசில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் தனது தோழியுடன் நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர் . அப்போது அவர் போலீஸ் சீருடை அணியாமல் சாதாரண ஆடையில் இருந்துள்ளனர். அப்போது அவரை பெண் போலீஸ் என்று தெரியாமல் அங்கு வந்த 2 வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாசமாக பேசியுள்ளனர்.

உடனே பெண் போலீஸ் அந்த வாலிபர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயற்சி செய்ததில்  ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவரை மட்டும் பிடித்து அண்ணா சதுக்கம் போலீசில் அவர் ஒப்படைத்தார். பிடிபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் சுக்லா ,வட  மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கொடுங்கையூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அந்த வாலிபரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Speaking obscenely and sexual harassment actions of young men from the northern states commotion at Marina


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->