#Breaking : நாளை முக்கிய முடிவு எடுக்கப் போகும் சபாநாயகர்! ஓபிஎஸ் நிலை என்ன! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட இபிஎஸ்!

அக்டோபர் 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்து இருந்தார் அப்பொழுது இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட கடிதம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அப்பாவு "எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நடித்த இரு கடிதங்களும் பரிசினையில் உள்ளது. சட்டமன்றம் கூடியதும் அதற்கான முடிவு எடுக்கப்படும். யாருக்கு எந்த இருக்க என்பது என்னுடைய முடிவு. சபையின் மரபுப்படி இரு கைகள் ஒதுக்கப்படும்" என்ன பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில் இபிஎஸ் தரப்பில் இருந்து சட்டப்பேரவை அலுவல் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என அதிமுக துணை கொரடா சட்டப்பேரவை செயலகத்தில் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். ஓபிஎஸ் தரப்பிலும் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். 

கடிதங்களின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நாளை ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவை பொருத்தவரை சபாநாயகரின் முடிவை இறுதியானது. யாரும் தலையிட முடியாது. சட்டசபையில் பெரும்பான்மை உள்ள தரப்புக்கு சாதகமாக சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று தெரிய வருகிறது. தற்பொழுது இபிஎஸ் அணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் பழனிச்சாமிக்கு ஆதரவாக முடிவு வெளியாகலாம். அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டால் ஓபிஎஸ் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம். எனினும் சபாநாயகர் எடுக்கும் முடிவு நாளை அறிவிக்கப்படலாம் அல்லது சட்டமன்ற கூட்டத்தாரர் கூடும் என்று அறிவிக்கப்படலாம். எதுவாக இருந்தாலும் நாளைய தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Speaker take important decisions tomorrow on EPS and OPS letters


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->