வத்தலகுண்டு அருகே பரபரப்பு.! 2வது திருமணம் செய்த தந்தையை அறிவாளால் வெட்டிய மகன்கள்.! - Seithipunal
Seithipunal


வத்தலகுண்டு அருகே இரண்டாவது திருமணம் செய்த தந்தையை மகன்கள் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஊத்தாங்கால் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாண்டி (49). இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சற்குணபாண்டி (23), புவனேஸ்குமார்(19) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயா உயிரிழந்துவிட்டார். இதனால் தனிமையில் இருந்த பாண்டி, கடந்த மாதம் கணவரை இழந்த ஜெயாவின் தங்கை பாண்டியம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சற்குணபாண்டியும், புவனேஷ் குமாரும், பாண்டி மற்றும் பாண்டியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த இரண்டு மகன்களும் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பாண்டியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுப்பதற்கு வந்த பாண்டியம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதைத்தொடர்ந்து காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தந்தையை அறிவாளால் வெட்டிய இரண்டு மகன்களையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sons who cut their fathers with wisdom due to 2nd marriage problem in Dindigul


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->