தாயை கொடூரமாக கொன்றுவிட்டு இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்! பதறிபோய் தந்தை எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா (7) என்ற மகனும் உள்ளனர்.

குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலப்பாண்டி கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தாயிடம் அருணாச்சலப்பாண்டி தகராறு செய்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தரவில்லை.

                 

இதனால் ஆத்திரமடைந்த அவர் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தாயின் சடலத்துடனேயே தூங்கியுள்ளார்.

பின்னர் அருணாச்சலப்பாண்டியின் அப்பா சின்னகணபதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அருணாச்சலப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

son killed mother for not giving money to drink


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->