மனைவி வர மறுப்பு... மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மாமியாரை மருமகன் கத்தியால்  குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வாவுருட்டி புதுவலவு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேலன் (39). இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த ஒரு மாதத்திற்குமாதத்திற்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு ரம்யா அதே பகுதியில் உள்ள தனது தாய் பழனியம்மாள் (58) வீட்டிற்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று மனைவி வீட்டிற்குச் சென்ற செங்கோட்டுவேலன், வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் ரம்யா வர மறுத்ததால் அப்பொழுது மாமியார் பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செங்கோட்டுவேலன் கத்தியால் பழனியம்மாளை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காயமடைந்த பழனியம்மாள் சிகிச்சைக்காக நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பரமத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் செங்கோட்டுவேலனை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Son in law arrested for stabbing mother in law in namakkal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->