தாய் இறந்த துக்கத்தில் மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
Son death in heartattack in mother death
தாய் இறந்த துக்கத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் மருதம்மாள்(வயது 93) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக மருதம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன் (வயது 56) செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இறந்த பழனியப்பன் நேற்று காலை திடீரென நெஞ்சு வலியால் இறந்து விட்டார். பின்னர் தாய் மகன் இருவருக்கும் அடுத்தடுத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
English Summary
Son death in heartattack in mother death