இதுவே முதலும் கடைசியுமாக... தமிழக அரசே நடவடிக்கை எடு... கொந்தளிப்புடன் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய மாணவியின் பெயர் திலகவதி. இவர் அங்குள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.. இந்நிலையில்., பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் இளைஞன் ஆகாஷ்., இவரது வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததில்., அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு திலகவதியை கொலை செய்த இளைஞனை கைது செய்தனர். 

இந்த விஷயம் அப்பகுதி மக்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இந்த பெண்மணி கொலை செய்யப்பட்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் கொலையாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கவில்லை. மேலும், இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வந்தது.

இதுகுறித்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தனது ட்விட்டர் பக்கத்தில், " சாதி, மதம், இனம், மொழி என எந்தவொரு அடையாளத்தின் அடிப்படையிலும் பெண்கள் மீதான வன்முறை ஏவப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். 

கல்வி பயிலும் காலத்தை குறிவைத்து 'பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை’ திணிக்கப்படுவதால், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் நிறுத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும், பாமக வழக்கறிஞர் பாலுவும் இது குறித்து ட்விட் பதிவு செய்துள்ளார். 

வழக்கறிஞர் பாலுவின் ட்விட்டர் பக்கத்தில், கருவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்ற பெண் நாடக காதல் கும்பலின் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு கடந்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 2 லட்சம் உடனடி நிவாரண தொகை இதுவரை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.

கடலூர் திலகவதி மட்டுமல்லாது விழுப்புரம் சிறுமி நவீனா என்று நாடககாதலால் அரங்கேறிய படுகொலைகளும், குடும்பங்களின் தற்கொலையும் தமிழகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வாக பெண்களிடம் அத்துமீறும் கயவர்களை ஒழிக்க சட்டங்கள் கடுமையாக வேண்டும். இந்த சட்டம் சாதிய பேதமின்றி பெண்களுக்கு பிரச்சனை என்றால் இதுதான் தீர்வு என்ற வகையில் மாற வேண்டும் என்பதை பலரின் கோரிக்கையாக இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social media trend about Cudallore Thilagavathi girl drama love murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->