சென்னை தண்டையார்பேட்டையில் விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10,000 பண மாலை திருட்டு; 04 சிறுவர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதி பெற்று தனது வீட்டின் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 13-ஆம் தேதி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி விநாயகர் சிலைக்கு 100 ரூபாய் நோட்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பண மாலையை அணிவித்துள்ளார். இரவு வரை விநாயகர் சிலை அருகில் இருந்த விக்னேஷ்வரன், அதன்பிறகு வீட்டுக்கு சென்றுள்ளார்.  மறுநாள் 16-ஆம் தேதி அதிகாலையில் விநாயகர் சிலையை வந்து பார்த்தபோது, சிலைக்கு அணிவித்திருந்த ரூ.10 ஆயிரம் பண மாலை காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்திய நிலையில், மேஅப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அதன்படி, திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 03-வது தெருவைச் சேர்ந்த ரூபன் (20), பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19) ஆகிய 02 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக 16 மற்றும் 17 வயதுடைய மேலும் 04 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Six people arrested for the theft of a rs10000 currency note garland adorning a Vinayagar idol in Tondiarpet


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->