தைப்பூசத்திற்கு வந்த தம்பியுடன் ஓட்டம் பிடித்த அக்கா.! 4 குழந்தைகளை தவிக்க விட்டு, கணவனுக்கு கம்பி நீட்டிய மனைவி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் அருகே கருணாகரன் என்பவர் வைத்தீஸ்வரி என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து இருக்கின்றார். அதன் பின்னர், சென்னையில் குடியேறி இருக்கின்றனர். கருணாகரன் சென்ட்ரிங் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தையும், ஆண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது.

இந்த நிலையில் லாரி ஓட்டுநரான 24 வயது ஏழுமலை வைத்தீஸ்வரி தூரத்து உறவு முறையில் தம்பி முறை உறவுக்காரர், சென்னையில் தங்க வீடு இல்லாமல் இருந்துள்ளார். தங்கள் வீட்டில் ஏழுமலையை தங்க கருணாகரன் அனுமதி கொடுக்க, சுமார் 8 மாத காலமாக ஏழுமலை கருணாகரன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். தன்னுடைய அக்காவின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக பேசி மாற்றி ஏழுமலை அவரை அழைத்து கொண்டு சில நாட்களுக்கு முன்பு ஓட்டம் பிடித்து இருக்கின்றார். இவர்கள் மதுரையில் தங்கி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

மீண்டும் வைத்தீஸ்வரியை அழைத்து வந்து சொந்த ஊருக்குச் சென்று தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது சொந்த ஊருக்கு வந்த ஏழுமலை, வைத்தீஸ்வரியின் மனதை மாற்றி மீண்டும் அழைத்துச் சென்றுவிட்டார். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால், மன உளைச்சலில் இருந்த கருணாகரன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், அவருடைய தாயும் மீதமிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார். இருவரும் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுடைய நான்கு குழந்தைகளும் தற்போது தவிப்பில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sister illegal affair with his brother


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->