காதல் ஜோடிக்காக டி.எஸ்.பி ஆபிஸ் விசிகவினரால் முற்றுகை.. ஆரணியில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


மகள் காதலனுடன் செல்ல முடிவு செய்ததால் டிஎஸ் பி அலுவலகத்திலேயே தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்,  சின்ன அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுவேதா. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

பயிற்சிக்காக  ஆரணி மருத்துவமனைக்கு சென்ற போது இரும்பேடு கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருடன் சுவேதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்தனர்.

இதனை அடுத்து 3 நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்ற சுவேதா திரும்பி வரவில்லை. மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

அப்போது மாதவனை திருமணம் செய்து கொண்டு சுவேதா அவர் வீட்டில் வசிப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் நேற்று டி எஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர்.

காதல் ஜோடிக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர்  அங்கு வந்ததால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது,. இதனால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து சுவேதாவிடம் விசாரணை மேற்கொள்ளும் போது அவர் கணவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். பெற்று வளர்த்த மகள் செய்த இந்த செயலால் மனமுடைந்த அவரின் தாய் அங்கு வைக்கப்படிருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Siege by DSP office fan for romantic couple


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->