இறந்து போன 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


ரேபிஸ் (வெறிநாய்கடி நோய்) ஒழிப்பை செயல்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு ரேபிஸ் கண்காணிப்பு ஹெல்ப்லைனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 1 லட்சத்து 11 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. இவைகளில் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் உள்ள 49 தெருநாய்கள் கோவை மாநகராட்சியில் 14 முக்கிய இடங்களில் இருந்தும், புறநகர் பகுதிகளில் இருந்தும் பிடிக்கப்பட்டன. 

இதில் 04 தெருநாய்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 45 தெருநாய்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், அவைகள் இறந்து போயுள்ளது.

இவ்வாறு இறந்த போன 45 தெருநாய்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து, ரேபிஸ் நோய் இருந்ததா..? என கண்டறிய எல்.எப்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவை, கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மற்றொரு சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாதிரிகளை ஆய்வு செய்ததில் 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது மூலம் கோயம்புத்தூரில், ரேபிஸ் பாதிப்புள்ள தெருநாய்கள் சுற்றி வருவது உறுதியாகியுள்ளது. அதனை  தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking information that 25 stray dogs that died in Coimbatore tested positive for rabies


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->