பரபரக்கும் வழக்கு...! கோவை அருகே அடுத்தவர் மனைவியிடம் அநாகரிக லீலை...! தட்டிக்கேட்ட வாலிபர் அடித்தே கொலை...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி (40), கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள கோவில்மேடு பகுதியில் தனது இரு மனைவிகளுடன் வசித்து வந்தார். கட்டிடத் தொழிலாளியான இவர், வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நேரங்களில் கூனிமூக்கு பகுதிக்கு சென்று தொழிலாளர்களை சம்பளம் பேசி அழைத்து வருவது வழக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, நேற்று காலை மணி வழக்கம்போல் கூனிமூக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வேலைக்காக காத்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரை சந்தித்தார். அவரிடம் சம்பளம் குறித்து பேசி, கட்டிட வேலைக்காக அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.மாலை வேலை முடிந்த பிறகு, அந்த நபரை மணி தனது வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக, அந்த நபர் மணியின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டு திடீரென கட்டிப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மணி, அவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.இதையடுத்து, மணி அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வீடு திரும்பி தூங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழலில், இரவு நேரத்தில் அதே நபர் மீண்டும் மணியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

மணி ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார் என எண்ணிய அவர், வீட்டிற்குள் நுழைந்து மணியின் மனைவியிடம் மீண்டும் அத்துமீறி நடக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால், தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த மணி இதையெல்லாம் கவனித்துள்ளார்.

மாலை நேரத்தில் எச்சரித்த பின்னரும் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மணி, அருகில் இருந்த கட்டையை எடுத்து அந்த நபரை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலில் அந்த நபருக்கு தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

வலியைத் தாங்க முடியாமல் அலறித் துடித்த அவர், சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன்பின், உயிரிழந்த நபரின் உடலை மணி தடாகம் சாலைக்கு கொண்டு சென்று அங்கே வீசிவிட்டு, எதுவும் நடக்காதது போல மீண்டும் வீட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள், சாலையோரத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சாய்பாபா காலனி காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

இதுதொடர்பாக மணியை பிடித்து காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற கேள்விகளுக்கு, அவரது பெயர் மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரம் தெரியாது என மணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, உயிரிழந்த நபரின் அடையாளத்தை கண்டறியும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shocking case man had indecent act his neighbor wife near Coimbatore young man who overheard him beaten death


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->