தங்கும் விடுதியில் அதிர்ச்சி....கஞ்சா வேட்டையில் 30 மாணவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வரும் நிலையில், இந்த கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரியின் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்களிடையே நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கல்லூரி விடுதிக்கே சென்று மாணவர்களை போலீசார் கைது செய்திருப்பது மிக மோசமானது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in hostel 30 students arrested in cannabis hunt


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->