இன்ஸ்டாகிராமில் கப்பலில் வேலை விளம்பரம்! வேலை கேட்ட வாலிபரிடம் ரூ.75,000 மோசடி!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : இன்ஸ்டாகிராம்  சமூக வலைதளபக்கம் மூலம் கப்பலில் வேலை என கூறி போலி நியமன ஆணையை வழங்கி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபரிடம் மர்மநபர் ரூ. 75000 பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரிசிலன். இவர் கப்பல்த்துறை சார்ந்த படிப்பினை படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் வேலை தேடிக் கொண்டிருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கப்பலில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் என்னை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார்.

பின்னர் அந்த விளம்பரத்தை கொடுத்தவர் பிரிசிலன் தொடர்பு கொண்டு தற்போது கப்பல் கோவாவில் நிற்பதாகவும் அதில் பணிபுரிய ஆட்கள் தேவை என்றும் கூறியுள்ளார். கப்பலில் பணிபுரிய உங்களுக்கு வேலை தேவை என்றால் தங்களுக்குரிய ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளார் அதைத்தொடர்ந்து பிரிசிலனும் ஆவணங்களை அனுப்பி உள்ளார்.

ஆவணங்கள் சரி பார்த்துவிட்டு கம்பெனியின் பணி நியமன கடிதத்தை இமெயில் மூலம் அனுப்பி உள்ளார். அதை வைத்து உறவினர் உதவியுடன் விசாரித்ததில் அந்த கம்பெனியின் கப்பல் கோவாவில்  நிற்பது என்பதை பிரிசிலன் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் அந்த நபர் தொலைபேசியில் பரிசினை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு ரூ.75000 அனுப்புமாறு கூறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து பிரிசிலனும் முதற்கட்டமாக வங்கி கணக்கிருக்கு ஒரு ரூபாய் 50,000மும் பின்னர்  ஜி பே மூலம் ரூ.25,000 அனுப்பி உள்ளார். அதன் பின்னர் கம்பெனியில் விசாரித்த போது அவை அனைத்துமே போலி என்று தெரிய வந்துள்ளது. அதனை எடுத்து அந்த நபரின் செல்போன் எண்ணை  தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிசிலன் வட்டிக்கு கடன் வாங்கி வேலைக்கு கட்டிய பணம் ஏமாற்றப்பட்டது அறிந்து தன்னைப்போல் யாரும் ஏமாற்றக்கூடாது என்பதால் நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தருமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் சமூகவலைகளில் கப்பலில் வேலை எனக்கூறி போலி நியமன ஆணையை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ship job scam Rs 75000 fraud


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->