மாவட்டம் முழுவதும் ஷவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மாவட்டம் முழுவதும் ஷவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் கடந்த 16ஆம் தேதி இரவு சுஜாதா என்பவர் தனது பிள்ளைகள் மற்றும் அண்ணன் சினோஜ் , அண்ணி கவிதா உள்ளிட்டோருடன் சவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கியுள்ளார்.

அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுஜாதாவின் மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதுமட்டுமல்லாமல், இன்று மாணவியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்ததன் எதிரொலியாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shawarma and gril chicken ban in namakkal district collector uma order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->