திருப்பத்தூர் || ஒரு லோடு எம்.சேண்டுக்கு 6 மூட்டை சிமெண்ட்! யாருப்பா அந்த காண்ட்ராக்டர்! - Seithipunal
Seithipunal


கட்டி முடித்து ஐந்து நாட்களே ஆன கழிவுநீர் கால்வாய் ஒரு மணி நேர மழைக்கு கூட தாங்கவில்லை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கட்டி முடித்து ஐந்து நாட்களில் ஆன கழிவுநீர் கால்வாய் சுவர்களில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஆம்பூர் நகராட்சியில் உள்ள 14 வது வார்டும் மற்றும் 20வது வார்டும் இணைக்கும் வகையில் 87 லட்ச ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐந்து நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதனை அடுத்து ஒரு மணி நேரம் திடீர் என பொழிந்த மழைக்கு  கழிவுநீர் கால்வாயின் பக்கவாட்டு சுவர் 60 அடி நீளத்திற்கு அடியோடு சாய்ந்துள்ளது. இதனால் கழிவுநீர்கள் சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு காரணம் தரம் இல்லாத எம்.சாண்ட கொண்டு வந்து ஒரு டிராக்டர் எம் சாண்டிற்கு ஆறு மூட்டை சிமெண்ட் என உபயோகப்படுத்தி இந்த கழிவுநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sewage canal was built only five days ago it not withstand even an hour of rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->