விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்துள்ளனர்- விஜயபிரபாகரன் பேச்சு! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில், தே.மு.தி.க. 21-ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயபிரபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:“தே.மு.தி.க. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்கிறது என அவதூறு பரப்பப்படுகின்றது. ஆனால், உண்மையில் தே.மு.தி.க. எப்போதுமே மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறது.”

“விஜயகாந்த் ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்தார். அதேசமயம், ‘அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம்’ என்ற கருத்தை வலியுறுத்தினார்.”

“தமிழக நெசவாளர்கள் தொழில் பாதிக்கப்பட்ட போது, அனைத்து கட்சிகளும் கஞ்சி ஊற்றினாலும், விஜயகாந்த்தான் நேரடியாக காசு கொடுத்து சேலைகளை வாங்கி மக்களிடம் வழங்கினார்.”

மேலும், பெண்கள் அரசியலில் பங்கேற்பு குறித்து, “தமிழகத்தில் ஒரே பெண் அரசியல் தலைவர் பிரேமலதா தான். அவருக்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும்” என்று கூறினார்.

புதிய கட்சிகள் உருவாகும் சூழ்நிலையில், “இன்றைக்கு சீமான், விஜய் போன்றோர் கட்சி தொடங்கியிருப்பது, விஜயகாந்த்தை பார்த்து தான்” என விமர்சித்தார்.

இறுதியாக, “2006-ல் விஜயகாந்த் சட்டசபைக்குச் சென்றது போலவே, 2020-ல் பிரேமலதாவும் சட்டசபைக்கு செல்வார்” என நம்பிக்கை தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman and Vijay started their party after seeing Vijayakanth Vijaya Prabhakaran speech


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->