கரூர் சம்பவம் - பிரச்சார இடத்தில் சேகரிக்கப்பட்ட காலணிகளை பாதுகாப்பு.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டத்தில் கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் தங்கள் காலணிகள் மற்றும் உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனால், ஏராளமான காலணிகள் சாலையில் சிதறி கிடந்தன. அந்தக் காலணிகள் அனைத்தும் தூய்மை பணியாளர்கள் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. இந்தக் காலணிகளை, ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், நேற்று அந்த காலணிகள் இரண்டாம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றி பாலம்மாள் புரத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காலணிகளின் எடை சுமார் 450 கிலோ இருக்கும் என்றும், அது அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

security to shoes from karoor tvk campaign place


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->