காதலனுடன் ரகசிய காதல்...காதலர்களை கண்ட பெற்றோர் அதிர்ச்சி..! - அடுத்து நடந்த சோக முடிவு..!
Secret love boyfriend Parents shocked to see lovers tragic ending that followed
கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட்டை நகர்ப்பகுதியில் வசித்து வந்த பூமிகா (19), அப்பகுதியில் உள்ள டயர் கடையில் பணியாற்றி வந்த இளம் பெண். அப்போது அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த டோங்ரிசாப் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பரிச்சயம், நாளடைவில் நெருக்கமான காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் உறவு குடும்பத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியது. பல இடங்களுக்கு சேர்ந்து சென்று நேரம் கழித்ததோடு, வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உறவு குறித்து அறிந்த பூமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து, அந்த உறவை முற்றிலும் கைவிடுமாறு எச்சரித்துள்ளனர்.ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பூமிகா தனது காதலைத் தொடர்ந்து பேணியதுடன், டோங்ரிசாப்பை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற உறுதியையும் வெளிப்படுத்தியிருந்தார். எனினும், இந்த திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக மறுப்பு தெரிவித்ததால், மனவேதனையில் சிக்கிய பூமிகா தீவிரமான மனஅழுத்தத்திற்குள் தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, தனக்குள் உருவான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயர தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், பூமிகா உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உடனடியாக அவர்கள் தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இளம் வயதில் ஏற்பட்ட இந்த துயரமான முடிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
Secret love boyfriend Parents shocked to see lovers tragic ending that followed