திருமண வாழ்க்கை தரத்துக்கு இணையாக வாழ வேண்டும்...! - ஜீவனாம்சம் குறித்து உச்சநீதிமன்றம் கடும் கருத்து - Seithipunal
Seithipunal


ஜீவனாம்சம் என்பது வெறும் பெயரளவிலான உதவி அல்ல; அது ஒரு பெண்ணின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கும் அடிப்படை உரிமை என வலியுறுத்திய உச்சநீதிமன்றம், “மனைவியை பராமரிப்பது கணவரின் முதன்மை மற்றும் தொடர்ச்சியான கடமை” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனைவி கண்ணியத்துடனும், திருமண வாழ்க்கையில் அனுபவித்த நிலைக்கு இணையாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது கணவரின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியருக்கு 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்து, கணவன்-மனைவி உறவில் இடைவெளி உருவானது.

இந்த நிலையில், மனைவிக்கு உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மனவேதனையில் சிக்கிய அந்த பெண், திருமணமான ஒரு ஆண்டுக்குள் தன் தாய் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.இதைத் தொடர்ந்து, தனித்து வாழும் அந்த பெண் தனது அன்றாட செலவுகளுக்காக கணவரிடமிருந்து மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணைந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் ரூ.8 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. பின்னர், தொகையை உயர்த்தக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அதை ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது.ஆனால், இந்த தொகை போதுமானதல்ல எனக் கருதிய அந்த பெண், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணைந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, மனைவிக்கான ஜீவனாம்சத் தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.தீர்ப்பில் நீதிபதிகள் வலியுறுத்தியதாவது, “ஜீவனாம்சம் என்பது ஒரு மாயை போல இருக்கக் கூடாது; அது ஒரு பெண்ணின் மரியாதையையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்கும் உரிமை.

கணவன் தனது மனைவியை கண்ணியத்துடனும், அவள் முன்பு அனுபவித்த வாழ்க்கை நிலைக்கு இணையாகவும் பராமரிக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மனைவி தன்னிறைவு மற்றும் மரியாதையுடன் வாழ்வதற்கான பொருளாதார ஆதரவை வழங்குவது கணவரின் கடமையாக இருந்தாலும், அதே சமயம் அந்தச் சுமை அளவுக்கு மீறாமல் இருக்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீர்ப்பு, குடும்ப உறவுகளில் பொறுப்பு மற்றும் சமநிலையை வலியுறுத்தும் முக்கியமான வழிகாட்டுதலாக பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Married life should be lived at par standard living Supreme Court strongly condemns alimony


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->