வாட்ஸ்அப்-பில் வந்த புகைப்படம்., அதிர்ந்துபோன தலைமை ஆசிரியர்.! சிக்கிய பசுபதி சிறையில் அடைப்பு.!   - Seithipunal
Seithipunal


நீலாங்கரை அருகே பள்ளி ஆன்லைன் வகுப்பு நடைபெறும் மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பிய, அதே பள்ளியை சேர்ந்த மாணவரின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அருகே நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் ஏழாம் வகுப்புக்கு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தார். இதற்காக அவர் ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்றையும் உருவாக்கி இருந்தார்.

இந்த வாட்ஸப் குழுவில் ஒரு மாணவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மட்டும் தொடர்ந்து ஆபாச படங்கள் அனுப்பப்பட்டு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன், மதுராந்தகம் அடுத்த பொளம்பாக்கம் பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி, தாத்தாவின் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அந்நேரம் அந்த மாணவனின் சித்தப்பா முறை உள்ள பசுபதி என்பவன் அவரின் செல்போனில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடைபெறும் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவிற்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, பசுபதியை (25 வயது) போலீசார் கைது செய்தனர். பசுபதி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school whets app group image


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->