காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் - பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.!!
school student sucide for low marks in theni
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் பிரிஜித் இன்பென்ட். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பிரிஜித் தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையறிந்தால் பெற்றோர் திட்டுவார்கள் என்று நினைத்த சிறுவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student sucide for low marks in theni