கிணற்றில் மிதந்த பள்ளி மாணவனின் சடலம் - திருப்பத்தூரில் பரபரப்பு.!!
school student body found in well at tirupathur
திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி முகிலன் என்ற மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் முதல் வகுப்புக்கும் செல்லாமல், வீட்டிற்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால், பதற்றமடைந்த அந்த மாணவனின் பெற்றோர் திருப்பத்தூர் நகர போலீசில் புகார் அளித்தனர்.
அதன் படி போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் கிணற்றில் ஒரு மாணவர் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பத்தூர் போலீசார் கிணற்றில் இருந்து அந்த மாணவர் உடலை வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம் கிடந்தது எப்படி? மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student body found in well at tirupathur