பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இத்தனை நாட்களா? குஷியில் மாணவர்கள்.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மே மாதம் 1ம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை விடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கடும் வெயிலின் காரணமாக ஜூன் மாதம் 4ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது .

நடப்பு கல்வி ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

எனினும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விடுமுறை இல்லா தினங்களில் பள்ளிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் ஜூன் நான்காம் தேதி நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அந்தப் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். 

இதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் நான்காம் தேதி வரை விடுமுறை என்பது உறுதியாகி உள்ளது. அதே வேளையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்தால் ஜூன் 2வது வாரம் வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School holidays may be extend until June 2nd week in TN


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->