அருந்ததியர் இன இளைஞர் காதல் விவகாரத்தில் ஆணவக் கொலையா? போலீசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயதாகும் முத்தையா சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த இட்ட மொழி பகுதியை சேர்ந்த சுதா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

முத்தையா அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும் சுதாவின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எதிர்ப்பை மீறி முத்தையா தனதுவீட்டிற்கு  சுதாவை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் முத்தையா தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை அவருடைய சொந்த ஊரில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

பின்னர் அன்று இரவு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சென்ற முத்தையா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் முத்தையாவின் சகோதரர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் தேடி உள்ளனர். அப்போது காரம்பாடு ஓடை பகுதியில் முத்தையா கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த திசையன்விளை போலீசார் முத்தையாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்ததால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிர்படுத்தி உள்ளனர். மூத்தையா வீட்டிற்கு பெண் வந்து சென்ற நிலையில் கொலை சம்பவம் நடந்திருப்பதால் பெண் வீட்டார் கொலை செய்து இருக்கலாம் என அவருடைய பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் காரணமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் திசையன்விளைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scheduled caste youth massacred in Tirunelveli


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->