விஜயுடன் கூட்டணி வைக்க தயாராகும் காட்சிகள்! விஜய் கூட சேரும் தலைவர்கள்! அதிர்ச்சியில் திமுக..மாஸ்டர் பிளான் போட்ட விஜய்?
Scenes of people preparing to form an alliance with Vijay Leaders who will also join Vijay DMK in shock Vijay has a master plan
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது.
ஒருபுறம் திமுக கூட்டணி ஏற்கனவே உறுதியான நிலையில் இருக்கிறது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 2019-இல் அமைக்கப்பட்ட கூட்டணி இன்று வரை தொடர்கிறது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் குழப்பத்தில்தான் இருக்கிறது. 2021-இல் கூட்டணியில் இருந்த பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் விலகியது. பாமகவும் அதே பாதையைத் தான் பின்தொடர்ந்தது. தற்போது அதிமுக பாஜகவுடன் கைகோர்த்தாலும், தேமுதிக உடன் வருமா என்பது இன்னும் கேள்விக்குறிதான். இருப்பினும் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே போன்ற கட்சிகள் அதிமுக பக்கமே சாய்ந்துவிட்டன என்று சொல்லலாம்.
இந்தச் சூழலில், புதிய பரிமாணமாக உருவெடுத்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.
இரு பெரும் மாநில மாநாடுகளை நடத்தியதும், தேர்தல் சுற்றுப்பயணத்தை தீவிரமாக மேற்கொண்டு வரும் விஜய், 2026 தேர்தலை குறியாக வைத்துள்ளார். "ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்துடன் அவர் களம் இறங்கியிருப்பதால், கூட்டணித் திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. தினகரன் வெளிப்படையாகவே, "விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் என்ன தவறு?" என்று பேசியிருப்பது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக உள்ளிட்ட சில கட்சிகளுடனும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகத் தகவல்.
ஆனால் காங்கிரஸ் விஜயுடன் கைகோர்ப்பார்களா என்ற கேள்விக்கு சமீபத்திய நிகழ்வுகள் பதில் சொல்லியிருக்கின்றன. ராகுல் காந்தியின் யாத்திரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றது, திமுக–காங்கிரஸ் கூட்டணி உறுதியானதையே வெளிப்படுத்திவிட்டது.
இதனால், அடுத்தடுத்த நாட்களில் விஜயின் கூட்டணிக் கொள்கை எப்படி வெளிவரப் போகிறது என்பது தமிழக அரசியலின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது.தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, திமுக கூட்டணி உறுதியாக, அதிமுக கூட்டணி தேடலில், விஜய் கூட்டணி ரகசியமாக, சீமான் தனித்து — இப்படியான நான்குமுனைப் போட்டி தான் 2026 சட்டமன்றத் தேர்தலின் சித்திரமாகத் தெரிகிறது.
English Summary
Scenes of people preparing to form an alliance with Vijay Leaders who will also join Vijay DMK in shock Vijay has a master plan