இளம்பெண்ணுடன் உல்லாசம்:  காலையில் தொழில் அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ஓட்டலில் தங்கி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த தொழில் அதிபருக்கு மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்த போது  காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த   47 வயது உடைய தொழில் அதிபர் ஒருவர் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்று அங்குள்ள பாரில் மது அருந்தி உள்ளார். அப்போது அங்கு அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காதலியான இளம்பெண்ணும் மதுகுடித்துள்ளார். மதுபோதையில் இருவரும் சந்தோசமாக இருந்துள்ளனர்,இதையடுத்து இருவருக்கும் போதை தலைக்கு ஏறிய நிலையில் அதே ஓட்டலில் அறை எடுத்து தங்கி இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த அந்த இளம்பெண் மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது காணாமல் போயிருந்தார்.அப்போது  தொழில் அதிபர் கழுத்தில் அணிருந்திருந்த 10 பவுன் நகையும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உல்லாசமாக இருந்த இளம்பெண் அவரது செயினை திருடி கொண்டு ஓட்டலில் இருந்தது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் நகையுடன் தப்பி ஓடிய கில்லாடி பெண்ணை தேடி வருகிறார்கள்.மேலும் விசாரணையில்  தலைமறைவான பெண் தொழில் அதிபரின் காதலி ஆவார்.இருவரும் இது போன்று அடிக்கடி வெளியில் தங்கி உல்லாசமாக இருப்பது வழக்கமாம். இதனை பயன்படுத்தியே தொழில் அதிபரின் காதலி அவரிடம் இருந்து 10 பவுன் நகையை நைசாக திருடிக்கொண்டு தப்பி உள்ளார். நகையுடன் தப்பி சென்ற இளம்பெண் தீபிகா என தெரியவந்துள்ளது. இதன்பேரில் அவரை கைது செய்தவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Scandal with a young woman Shock waiting for the businessman in the morning


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->