#JustIn: "சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு.." உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு.!
savukku shankar case judgement in supreme court
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அவமதித்ததாக்க கூறப்பட்ட வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யூட்யூப் பிரபலம் சவுக்கு சங்கர் மீது நீதித்துறையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளான சஞ்சீவ் கண்ணாவிண் அமர்வு முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. இதில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கடந்த நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அவரது சிறை தண்டனைக்கான தடை உத்தரவை மேலும், நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருடைய ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
savukku shankar case judgement in supreme court