கருத்து சுதந்திரத்தை படுகொலை செய்யும் திமுக அரசு.? சவுக்கு சங்கரை தொடர்ந்து அடுத்தடுத்த புள்ளிகளுக்கு குறி.?!  - Seithipunal
Seithipunal


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள யூடியூபர் சவுக்கு ஷங்கரை தொடர்ந்து, பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பேசியதாக இணைய பிரபலமான சவுக்கு சங்கர் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் பதில் நீதிமன்றத்திற்கு திருப்திகரமாக இருக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது அரசு வேலையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாகவும், சமூக வலைதளங்களில் பேசுகின்ற கருத்து சுதந்திரத்தை திமுக ஒடுக்குவதாகவும் நெட்டிசன்கள் பரவலாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் புகழேந்தி குடந்தை அரசன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விவேக் கிளம்பியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் ஆர் எஸ் எஸ் போன்ற சர்ச்சைக்குரிய அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும் போது அமைதிப் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை இது எப்படி நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர். 

திமுக அரசின் இந்த ஒடுக்குமுறை அதிமுக ஆட்சியின் போது கூட இல்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku shankar and more social activist arrested in Dmk period


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->