நடிகை பி. சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் திரையுலகம்!
Sarojadevi death
பழமையான சினிமா திரையுலகத்தை அலங்கரித்த நடிகை பி. சரோஜா தேவி (87) இன்று காலை பெங்களூருவில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.
கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், 1950-களில் இருந்து 70-கள் வரை இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தார்.
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ராஜ்கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்துள்ள அவர், தனது சிறந்த நடிப்புக்கு இந்திய அரசின் பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
சரோஜா தேவியின் மறைவு திரையுலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல், சினிமா, கலையுலகைச் சேர்ந்த பலர் அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.