பகுதிநேர ஆசிரியர்களுக்கு நற்செய்தி - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், தோட்டக்கலை உள்ளிட்ட 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால், பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர்.

இருப்பினும் இவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இவர்களுக்கு தொகுப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ரூ.10,000-இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salry increase to part time teachers in tamilnadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->