சேலம்: தலைக்கவசம் அணிந்தும் அரங்கேறிய சோகம்.. முந்தி வந்த டாடா ஏஸ் வாகனத்தால் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் உள்ள எம்.பெருமாள்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கார்த்திக். இவர் கந்தம்பட்டி புறவழிச் சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தினமும் தனது வாகனத்தில் பணிக்குச் சென்று வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். 

இதன் போது அங்குள்ள உடையார்பட்டி புறவழி சாலை அருகேயுள்ள மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றுள்ளார். அப்போது பாலத்தில் ஏறி இறங்கிய சமயத்தில், எதிர்திசையில் லாரியை முந்த முயன்ற டாடா ஏஸ் வாகனத்தின் மீது மோதியுள்ளார். 

இந்த எதிர்பாராத விபத்தில் நிலைகுலைந்துபோன கார்த்திக் கீழே விழுந்ததில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. மேலும், அவர் தலைக்கவசம் அணிந்திருந்தும், தலையில் எந்த காயமும் இல்லாமல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பலியாகியுள்ளார். 

இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், பாலத்தின் இரு மருங்கிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு, அது சேதமடைந்து ஓரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இனியாவது விபத்துகளை தடுக்க காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Youngster Died in Accident 11 November 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->