சேலம் ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா.. 29 ஆம் தேதி துவக்கம்! - Seithipunal
Seithipunal


ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் திருமண மண்டபம் அமைக்க சிவாச்சாரியார் வேதமந்திரம் முழங்க பூமி பூஜை நடைபெற்றது.


சேலம் மாவட்டம் மல்லூர் நகர் கொங்கு வெள்ளாளக்கவுண்டர் தூரன்குல பங்காளிகளுக்கு தெய்வமான விளங்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய நூதன ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஆவணி மாதம் 13-ம் நாள் 29-08-2025 வெள்ளிக்கிழமை காலை 6-00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறும் ,

ஆவணி மாதம் 11 -ம் நாள் காவிரியில் இருந்து தீர்த்தகுடம் மல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேளதாளத்துடன் குதிரை மாடு வான வேடிக்கையுடன் கோயிலுக்கு  எடுத்து வருதல்,

 விழாவில் ஊர் பொதுமக்கள் சுற்றார் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மல்லூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் தலைவர் ராஜசேகரன் துணைத் தலைவர் கிருஷ்ணன் பெரியண்ணன் மோகன்குமார் வேலுமணி தெய்வசிகாமணி மகேந்திரன் முத்துராஜா பாலசுப்பிரமணியன் வெங்கடேஸ்வரன் மற்றும் கொங்குவேளாளர்கவுண்டர் தூரன்குல பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ காமாட்சியம்மனை அருள் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

 

இதேபோல ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் திருமண மண்டபம் அமைக்க சிவாச்சாரியார் வேதமந்திரம் முழங்க பூமி பூஜை நடைபெற்றது.

   திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்  ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் திருமண மண்டபம் அமைக்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பூமி பூஜை பெருமாக்கவுண்டர் வகையராக்கள் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக ஸ்ரீ திரோபதியம்மனுக்கு  பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம்  நடைபெற்று பின்பு தீபாரதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய வளாகத்தில் புதிய திருமண மண்டபம் அமைக்க சிவாச்சாரியார் வேதமந்திரம் முழங்க பூமி பூஜை நடைபெற்றது.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருமாள், துரை, ஜானகிராமன், கனகராஜ் இவர்கள்  முன்னிலையில் சிவகாமி தங்கராஜ், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் அரங்கநாதன், போர்மன்னலிங்கேஸ்வரர் தர்மகத்தா மணி,  வேடியப்பன், கண்ணன், ஜெயக்குமார், சுந்தரேசன், சம்பத், செல்வகுமார், சம்பத் ஜெயபால், ரமேஷ், மணிகண்டன், சீதாராமன் உட்பட பெருமாக்கவுண்டர் வகையராக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Sri Kamatchiyamman Temple Kumbhabhishega festival starts on the 29th


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->