பெயில் கிடைக்காததால் விரக்தி.. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன், பரலோகம் சென்றான்.! - Seithipunal
Seithipunal


போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவன், ஜாமீன் கிடைக்காத விரக்தியில் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதியை சார்ந்தவன் அசோக்குமார். இவன் 17 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், குற்றத்தை உறுதி செய்து காமுகனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில், பல முறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தும் பலனில்லை. 

ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனால் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சிறையில் இருந்தபடியே வேட்டி மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Prison Culprit Suicide and died due to Bail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal