தமிழ்நாடு | விநாயகர் சிலை கரைக்க சென்ற சிறுவர்கள் பலி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க சென்ற போது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விநாயகர் சிலையை கரைக்க சென்ற சந்தோஷ் என்ற 14 வயது சிறுவனும், நந்தகுமார் என்ற 14 வயது சிறுவனும் காவேரி ஆற்றின் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மூழ்கிய சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.

சிறுவர்களின் உடல் உடல்களை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி என்ற கிராமத்தை இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் வெளியான முதல் கட்ட தகவலின் படி, பெரியவர்கள் காவிரி ஆற்றல் நேரடியாக விநாயகர் சிலையை கரைக்க சென்ற நிலையில், சிறுவர்கள் தனியாக இரண்டடி, ஒரு அடி உயரமுள்ள சிலைகளை கரைப்பதற்காக, 16 கண்மாய் கண் வாயில் தேங்கி இருந்த நீரில், பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் உதவி ஏதும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க சென்றதாகவும், அப்போது இந்த சம்பவம் அசம்பாவிதம் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem near Mettur Two Boys death in Cauvery River


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->