சேலத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி அரசுக்கே வாடகைக்கு விட்ட சம்பவம் - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசுநிலத்தை ஆக்கிரமித்து அரசு நிறுவனத்திற்கே கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்ட விவகாரத்தில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாலகுண்டம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி, அரசு நிறுவனத்திற்கே வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, "அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து அனுமதித்தால் பேராசைக்காரர்கள், குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுப்பார்கள் " என்று தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறது வேதனையை அளிக்கிறது.

வாடகைதாரர்களை காலி செய்ய வைத்து, ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்கவும், அரசுநிலத்தை அபகரித்தவர்களுக்கு அபராதம் விதித்து அதனை வசூலிக்கவும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அரசு நிலத்தை மீட்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது " என்று தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Govt Land Occupy Issue Chennai HighCourt Order to Recover 8 Oct 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->